Tuesday, August 18, 2015
ஒரு கற்பனை
அடுத்த எலக்சனுக்கு நம்ம ஊரு அரசியல் மேதாவிகளின் திட்டங்கள் முன்மொழியப்படுகின்றன.
01.50 வருஷம் அனுபவமுள்ள டாக்டர்: நா மைதிரிட பொக்க. ரணில்ட மச்சான். நமோ மூணு முஸ்லிம மூணு கட்சில போட்ட மூணு பேரும் தொகுதில டொப் பண்ணுவாங்க. அப்போ லேசா MP எடுத்திடலாம்.
மக்கள்: அப்பிடியே நீங்க எங்க மருந்து எடுக்கிரீங்கண்டு சொல்லிட்டு போங்க.
02.விழிப்புணர்ச்சி கூட்டம்: நமோ புத்தலதுல பொறந்த மதுரன்குளில கல்யாணம் முடிச்ச கல்பிடியில ஊடு உள்ள ஒருத்தன போட்டா அவரு புத்தளதுல 5000 வோட், மத்ரன்குளில 5000 வோட் கல்பிடியில 5000 வோட், அப்புறம் அவர்ட மஹல் சிலாவதுல கல்யாணம் முடிச்சிருந்தா அதுல ஒரு 3000 வோட்.
மக்கள் : அப்போ ஒரு maths கிளாஸ் ஒன்னு செய்யலாம்.
03.முன்னால் பல கட்சி மாறி இப்போ தும்பிக்கைக்கு பாஞ்சவர் : நான் புத்தள மக்களுக்கு துரோஹம் பண்ண மாட்டேன்.
மக்கள் : நீங்க ஆணியே புடுங்க வானம்.
04.நம்ம ஹாஜியார் : நா எலச்சன் மாட்டேன். நேஷனல் லிஸ்ட் தரண்டு சந்திரிக்கா எமதுனா, போரவ் மகிந்த எனதுனா, போரவ் வன்னியார் எமதுனா. எனக்கு ஒரு வென்னெட் தந்தா சரி எந்த கட்சில வேணும்னாலும் கேக்குறேன். ஒரே கரைச்சல் தானே அதுதான் எலச்சன் கேக்க கூடதுண்டு நினைக்கிறேன்.
மக்கள் : பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு.
05. தல : நான் இந்த ஊருக்காக எவ்வளோவோ அபிவிருத்திகளை செய்திருக்கிறேன். மூடாத பல்கழலைகழகம், அறிவியல் பாடசாலை, இன்னோரன்ன அபிவிருத்தி திட்டங்கள்.
மக்கள்: எல்லா செஞ்சிக்கிரீன்கதான், ஆனா ஒங்கட முக புத்தக அல்லக்கைவளோ தொரத்தி உட இல்லையே!!! அவங்க பண்ற அளப்பர இருக்கே.. வாப்போவ்.
06. வன்னியார் : ம் ம்
மக்கள் : வாப்பா நீங்க வந்த வழிய பார்த்துட்டு போங்க.
07. A.O.A . - நமோ எல்லாரும் சேர்ந்து ஒரு பெரும்பான்மை ஆளுக்கு வேல செய்வோம்.
மக்கள் : நீங்க இன்னும் ஆனமடுவக்கு போகலையா?
08. மு. கா. புத்தளம் : நங்கள் கட்சி தலைமையோடு கதைத்து ...
மக்கள் : நெப்பாடுங்க, ஒங்களத்தான் தலைமை கணக்கெடுக்கிறதே இல்லயே.
------------------------------------------------------------------------------------------
மக்கள் : அப்போ நமக்கு MP எப்பவுமே இல்லையா?
மனசாட்சி : 26 வருசமா இல்லாம தானே இருந்தீங்க, இனிமே அப்பிடியே பழகிடும்.
-----------------------------------------------------------------------------------------
லேட்டா வந்த டவுட்டு -
நான் : என்னடா ஒருத்தனும் நம்ம பஸ் ஸ்டான்ட் கட்டுன மனுசண்ட ஐடியா கேக்க இல்லையாண்டு நம்மள கேக்க மட்டிகிரானுவோ??
என் மனசாட்சி: அப்பிடி ஒரு ஐடியா அவருக்கே இருக்கதுன்டு எல்லாருக்கும் தெரியும். இந்த முறை கூடி ஒரு ப்லான்னும் இல்லம்தான் வேல செஞ்சாரு.
நான் : அப்பிடிண்ட சரி
Labels:
Life Style,
Politics,
Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment